மனசிலிருந்து மெட்ராஸ் வரை

Sunday, December 31, 2006

நேர்மையாய் இருப்பதின் பயன்!

அறையில் நீண்டுக் கொண்டே போகிறது கனத்த மெளனம். சாவு விழுந்த வீட்டினைப் போல இருக்கிறது மனது. உனக்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். உனக்கான காரணங்களை சர்வசாதாரணமாக ஸ்மிருதியினை முன்னிறுத்தி நீ சொல்லிவிட்டு போய்விடலாம். ஆனால், என்னிடத்திலிருந்து பார்த்தால், எவ்வளவு பெரிய murdering the soul என்பது ஒரளவிற்கு தெரியும். இந்த புறக்கணிப்பினை ஒட்டுமொத்தமாக தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்கு இல்லை. எவ்விதமான வழியும் தெரியாமல் வெறுமனே உன் எஸ்.எம்.எஸ் களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன் மெயில்களை படித்துப் பார்க்கிறேன். எல்லா இடங்களிலும் காதலும், அன்பும் வழிகிறது. எங்கே தொலைந்து போனது அது இன்று ? அழுகையும், விரக்தியும், வெறித்த பார்வையுமாக வாழ்வு இருக்கிறது. நிராகரிப்பின் வலியென்பது சாதாரணமானதல்ல. வெறித்து பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். ஒவ்வொரு விநாடியும் ரத்தம் பட்ட வெட்டுக்காயத்தில் மிளகாய்தூள் தேய்க்கும் வன்முறையோடு நகர்கிறது. சடாலென என் தரைக்கு கீழே பூமி இல்லாமல் போனது போல இருக்கிறது. யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியாமல், உள்ளே வைத்துக் கொள்ளவும் முடியாமல், தொண்டையில் மாட்டிய மீன் துண்டாய் மூச்சு திணறுகிறது வாழ்க்கை. எல்லா சுவர்களும் சிரிப்பது போல இருக்கிறது. கண்கள் திறந்திருப்பின் எல்லாமே வெறுமையாக தெரிகிறது. கண்களை மூடினால் மனதின் ரத்த வடுகள் பெரியதாய் விரிகின்றன. திறக்கவும் முடியாமல், மூடவும் முடியாமல், வாழ்நாளின் மிச்ச நாட்களை எண்ண வேண்டும் என்கிற எண்ணமே மலையாய் முன் நிற்கிறது.

ஸ்மிருதியின் வாழ்க்கை என்கிற ஒற்றை ஆயுதத்தினை முன்வைக்கிறாய். என் பெண்ணினைப் பற்றிய அக்கறையும், அறிவும் இல்லாமலா இவ்வளவு விஷயங்களையும் யோசித்தோம்.4 வருடங்களாக மாறாத விஜய் 3 நாட்களில் மாற்றத்தினைப் பார்த்தவுடன், விலகுகிறேன் என்கிறாய். முன்பே எடுத்த முடிவுதானே என்கிறாய். நன்றாக யோசி குட்டி, ஒவ்வொரு முறையும் இரண்டு வருடம் தான் என்று சொல்லும் போதெல்லாம், அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் சொன்னேன். ஆனால், இன்றைக்கு ஒட்டுமொத்தமாக உதாசீனப்படுத்துதலில் என்ன எடுத்துக் கொள்ளப் போகிறாய். உன்னோடான ஒரு வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் தூக்கி எறிய துணிந்தவனுக்கு, நீ கொடுக்கும் வெகுமதி அவனை தூக்கி எறிவது தானா ?

என் நிலையில் நீ இருந்து யோசித்துப் பார். There are two ways of looking at life. Short term gain, long term pain. Long term pain, short term gain. எல்லோரையும் தவறாக எடை போடுவது போல என்னையும் போட்டு, ஒரு லாங்டெர்ம் வலிக்கு நீ தயாராகிறாய் என்பதில் இருக்கும் விசித்திரம் எனக்கு புரியவில்லை. கடைசியில் நீயும் என்னை ஏமாற்ற துணிந்து விட்டாய் என்பதுதான் உயிரை உறிஞ்சி எடுத்துவிட்டது. விஜய் எவ்வளவோ வாக்குறுதிகள் கொடுக்கலாம். மாறினது போல தெரியலாம். மாறிக் கூட இருக்கலாம். ஆனால், அதனால் பாதிக்கப்படுவது நான் தானே ? எனக்கு என்ன பரிகாரமிருக்கிறது. எல்லா நாட்களிலும், எல்லா உணர்வுகளையும், பகிர்ந்து கொண்டதற்கு பரிசு பிரிவும், ஏமாற்றமும், வெறுங்கையும்தானா. உலகின் ஏதோ ஒரு மூலையில் வெஸ்டர்ன் கலாச்சாரத்திற்கு உட்பட்டு ஸ்மிருதி சீரழிய அடிக்காலினை என்னை பலியாடாக்கி போடுகிறாயா ? அடிப்படையில் நாம் பேசிய எந்த விஷயங்களுமே விவாதத்திற்கு வரவில்லையே ஏன்? எல்லா முடிவுகளும் உன்னிடத்தில் கொடுக்கப்பட்டு விட்டது என்கிறாய். உன் முடிவென்ன என்பதுதானே முக்கியம். I gave you the exact same space for our life. Why is the "space" from vijay & your legal bonding becomes too comfortable, confidence than the one given by me. எல்லோரையும் போல் இல்லாமல், ஆரம்பம் முதல் கேட்டது கொடுத்ததற்கும், நேர்மையாய் இருந்ததற்குமான விலையா இது. யாருமே உன்னை நம்ப தயாராக இல்லாத போது, அல்லது நம்பாத போது நம்பியதற்கான பரிசா இது.

ரம்யா, உனக்கு வேண்டுமானால் இது ஒரு கனவு மாதிரி தெரியலாம். ஏப்ரலுக்கு பின் என் வாழ்நாளின் மொத்தத்ததையும் உனக்கும், ஸ்மிருதிக்கும் ஆனது என தீர்மானித்துக் கொண்டவனின் வலியினை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. எல்லாவற்றையும் ஒரே நாளில் ஒதுக்கி வைத்து விட்டு என்னால் உன்னை போல வாழ முடியாது. போன முறை பெங்களூரிலிருந்து நான் அனுப்பிய எஸ்.எம்ஸிற்கு உன் பதில் because we approach everythings passionately and genuinely என்று இருந்தது. நேர்மையும், தாக்கமும் ஒரு வாரத்திற்குதானா ? நேர்மையாய் இருப்பதின் வலி என்ன என்பது எனக்கு இதில் மட்டும் தெரியவில்லை. பல்வேறு முறை அடிப்பட்டு, வலி தாங்கி அனுபவப்பட்டிருக்கிறேன். என் மொத்த தனிப்பட்ட வாழ்வினையும் உன்னிடத்தில் சொல்லியதன் காரணம், கருணை பெற அல்ல. எவ்வளவு ஏமாற்றங்களையும், வலிகளையும், வேதனைகளையும் உறவுகள் என்கிற பெயரில் தாங்கியிருக்கிறேன். அதே உறவுகளுக்காக ஒடியிருக்கிறேன். உதவி செய்திருக்கிறேன். நன்றாக யோசித்துப் பார், நான் சொன்ன வாக்கியம் என்ன வென்று You reclaimed me என்பதுதானே. அதற்கான அர்த்தம் புரியவில்லை என்று உன் செயலில் தெரிகிறது. விஜய் மாறிவிட்டார் இப்போது நான் என்ன காரணம் சொல்வது என்று கேட்கிறாய். விஜய் மாறாததால் என்னை நேசித்தாயா, இல்லை உண்மையிலேயே ஒரு நிறை வாழ்வு வாழ நேசித்தாயா ? போன முறை நடந்த பிரச்சனைகளில் I care a shit about his life, let him die என்று சொன்ன உதடுகளா இன்றைக்கு வெறுப்போடும், கசப்போடும் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறது. எனக்கான வெளியில் எவ்வளவோ செய்ய இருந்தும் செய்யாமல் சும்மா இருந்ததின் காரணமென்ன? எல்லாவற்றையும் உன்னையே decide செய்ய சொன்னதின் பின்னிருப்பது உன் மேல் இருக்கும் அளவு கடந்த, வாழ்வினை நேசிக்கும் காதல் ஹனி. எப்படி சில பல நாட்களில் வாழ்வினை நேசிப்பதிலிருந்து, வாழ்வினை வெறுமனே வாழ்வதற்கான வெளியில் நீ இறங்கிவிட்டாய் ?

இன்றளவும் நான் மாறாமல் இன்னமும் அதிகமாய் காதலிக்கிறேன். காபி குடிக்கும் போது வெகு சுலபமாய் கேட்கிறாய், i hear the same fkin reason on either side என்று. Same fkin reason தான் ரம்யா, ஆனால் இதே காரணங்களை யாருமே சொல்லாத போது சொன்னவன் நான். தேவதைகளுக்கு இணையாக என் வாழ்விற்கான தேவையை நீ தீர்வு செய்தாய். Have i ever said 'my life' in the last few months, i always said its your life, our life and kuku's life. By being honest and genuine and caring and accepted for every distance barriers you put across, What am i supposed to get ? இவ்வளவு நாள் என்னை உதாசீனப்படுத்தியதற்கான தண்டனையை அனுபவிக்கட்டும் என்று சொன்னவள் தானே நீ. இவ்வளவு நாள் ஒரு பாவமும் இல்லாமல் நேசித்தற்கு, நீ தண்டனை தருகிறாயா குட்டி ? இப்போது நான் ரியாக்ட் செய்தால் கூட 3rd rated பொறுக்கியாக, உன் மனது பார்க்க தொடங்குவது எதனால்? நமக்கான வாழ்வு என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கலந்து யோசித்தற்கு, சிம்பிளாக நீ சொல்லும் பதில், 'எனக்கு உன்மேல நம்பிக்கை குறையுது' ? என் நட்பு, உறவுகள், குடும்பம் என்ற எதையும் பார்க்காமல், I care a shit about the society என்று தூக்கியெறிய தயாராக இருந்து நீயும், ஸ்மிருதியும் தான் என் மிச்ச வாழ்க்கை என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு தரப்படும் நீதி இதுதானா குட்டி ?

விஜய் மாறலாம். உன் அப்பா மாறலாம். சித்தி மாறலாம். அனு மாறலாம். ஆனால், மூன்று மாதங்களில் நீ என்னை எடைப்போட்டு என் மீது உனக்கு நம்பிக்கை போய்விட்டது. எல்லாருக்குமான உன் நியாய தராசு, என்னிடத்தில் வரும்போது மட்டும் ஏன் தவறாக இருக்கிறது. கொஞ்சிய நாட்களை விட நான் கெஞ்சிய நாட்கள் தானே குட்டி அதிகம். எல்லாவற்றிருக்கும் உன் சம்மதத்திற்காகவும், உன் ஆசையினை நிறைவேறவும் தானே கெஞ்சியிருக்கிறேன். உன் 26 வயது காலத்தில் உன்னை மனம்விட்டு சிரிக்க வைத்திருக்கிறேன் என்று நீ தானே சொன்னாய். உன்னை சிரிக்க வைத்ததற்கு பதிலாக வாழ்நாள் முழுதும் என்னை அழவைக்கப் போகிறாயா ?

வாழ்வின் நீள அகலங்கள் பற்றிய அக்கறையில்லாமல் உன்னை பற்றி மட்டுமே நினைத்தற்கு இவ்வளவு பெரிய பரிசு தருவாய் என கனவிலும்கூட நினைக்கவில்லை. Backup என்று சொன்னவுடன் கோவம் வருகிறது உனக்கு. ஒட்டுமொத்தமாக நேசிப்பினை கேவலப்படுத்தி விட்டதாக எண்ணுகிறாய். யாருடைய மனநிலையிலிருந்து பார்த்தாலும் அந்த வார்த்தையின் பின்னிருக்கும் உயிர்பிரியும் வலி உனக்கு தெரியாமல் இருக்கலாம். எல்லா கேள்விகளுக்கும் என்னை பதில் எழுத சொல்லிவிட்டு, இன்று என்னையே கேள்விக்குறியாக்குவதின் மூலம் யார் நிம்மதியாய் இருக்க போகிறோம். ஒரு வேளை கணவன், குழந்தை என்று நீ வேண்டுமானால் சடாலென மனதினை மாற்றிக் கொண்டு போய்விடலாம். தனிமையும், கழிவிரக்கமும், இயலாமையும், ஆற்றாமையும் அலைக்கழிக்கும் எனக்கு நிம்மதி எப்படி வரும் ? எல்லா நேசிப்பின் உள்ளும் இருக்கும் குறைந்தபட்ச எதிர்ப்பார்ப்பினைக் கூட புறந்தள்ளிவிட்டு போக உன்னால் எப்படி முடிகிறது ? மனச்சாட்சியினைத் தொட்டு சொல், என்னை தூக்கியெறிவதின் உள்காரணமென்ன ? இன்னமும் உனக்கு என் மீது நம்பிக்கை வராமல் இருக்கலாம். ஆனால், எல்லாவிதங்களிலும் நீ கைகாட்டும் எல்லாரையும்விட நான் நேர்மையும், உண்மையும், உழைப்பும் கொண்டவன் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை. நீ சொல்லக்கூடிய எல்லா குற்றச்சாட்டுகளையும் என்னால், எளிதாக, பிறவழிகளில் அடைந்துவிட முடியும். ஆனாலும், நான் பொறுமையாக இருக்கிறேன். ஒரு நிறை வாழ்வினை வாழ்வதற்கான தகுதிகளும், திறமைகளும், உன்னையும், என் குழந்தையும் நினைத்தாற்போல் வாழவைக்க முடியும் என்கிற நம்பிக்கையும் எனக்கு நிறையவே இருக்கிறது. முப்பது வருடங்களாக நாம் சம்பாதித்து வைத்தது நண்பர்களையும், உறவுகளையும், தொடர்புகளையும். என்னால் விஜய் போல எதைப் பற்றியும் அக்கறைப் படாமல் தன் குடும்பம், தன் வெளி என்று வாழமுடியாது. இந்த காரணத்திற்குகாகத்தானே என்னை பிடித்திருந்தது. இப்போது நீயும், என் குழந்தை, என் குடும்பம் என்று யோசிப்பதின் absurdity சத்தியமாக விளங்கவில்லை.

நேசிப்பது என்பது எதற்கு. ஸ்குஷியின் கண்ணீரினை பகிர்ந்து கொண்டதற்கும், அயராது உன்னை போன், எஸ்.எம்.எஸ், மெயில் என மஸ்கட்டில் இருக்கும் போது ஊக்குவித்தற்கும், நேசித்ததற்கும், எல்லாவற்றையும் உன்னிடத்தில் பகிர்ந்து கொண்டதற்குமான அடிப்படை உன்னோடு வாழவேண்டும் என்பதுதான். அப்படிப்பட்ட ஒரு எதிர்பார்ப்பு இருந்தது தவறா ? வாழவேண்டும் என்று நினைப்பது குற்றமா ? நமக்கான ஒரு வாழ்வினை வாழவேண்டும் என்று நினனத்தது தவறா? ஆனால், ஒட்டுமொத்த நேர்மையும், அன்பும், அனுசரணையும் கேள்விக்குறியாக்கப்படும் போது, என்மீது எனக்கே சந்தேகமிருக்கிறது. அனிஷிற்கு NRI கோட்டாவில் காலேஜ் இடம் வாங்குவது, அனுவினை காசு கொடுத்து சட்டத்தினை ஏமாற்றி கூட்டி சென்றது, யாருக்கும் தெரியாமல் அப்பார்ட் செய்தது என 'நேர்மை' உன் பக்கமிருக்கும் போது, நான் நேர்மையாய் என் பக்கத்தினை திறந்து காட்டியது தவறோ ? நான் நேர்மையாய் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் வராது என்று உள்மனது சொல்கிறது. மீதியினை உன் தீர்ப்பிற்கு விட்டு விடுகிறேன்.

விழ்வது எல்லாம் எழுவதற்கே என்று நினைப்பவன் நான். வீழ்ந்திருப்பது நானல்ல. நாம் குட்டி. காலம் தன் தீர்ப்பினை எழுதும். உயிரோடிருக்கும் பட்சத்தில் சந்திப்போம்.