மனசு முழுக்க....
போன வாரம் முழுக்க மண்டை காய்ந்தது நிஜம். வழக்கறிஞர்கள் மாற்றி வழக்கறிஞர்கள் பார்த்து ஒரு விதமான அலர்ஜி நிலைக்கு போனது என்னவோ உண்மை. ஆனாலும், தீவிரமாய் நம்பினேன் நான் ஒரு வழி கண்டிப்பாக இருக்கும் நமக்கென்று. ஆனால், என் பயமோ, ஒவ்வொரு மீட்டிங் முடிவின் போதும் உன் முகத்தில் தெரிந்த அவநம்பிக்கையும், கெஞ்சலும்தான். அருள்மொழி பார்த்துவிட்டு திரும்பிய கணத்தில் உன் கண்ணில் தெரிந்த சோகத்தில் ஆடிப் போனேன் என்றால் அது பொயில்லை. கிஷோர் பார்த்த பிறகு தான் நம்பிக்கையின் ஒளி உன் கண்ணில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. நம்பிக்கை வை ரம்யா, நாம் இணைவோமென்று. கிஷோருக்கு பிறகான ஒரு குட்டி கொண்டாட்டத்தில் உன் கண்களில் வழிந்த சந்தோஷத்திற்கு பிறகுதான் உனக்கே நம்பிக்கையும், தெளிவும் வந்திருக்கிறது. இனி வரும் காலங்கள் மிக முக்கியமானவை. சொந்தங்களும், உறவுகளும் உன்னை கன்வின்ஸ் செய்ய துடிக்கும் ஒரு கசப்பான, கடுமையான வாழ்வினை நீ தனியாக சந்தித்தாகவேண்டிய கட்டாயங்களிலிருக்கிறது. பயப்படாதே ரம்யா, நான் இருக்கிறேன். இந்த வழக்கின் முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் வழக்கினை நமக்கு சாதகமாக ஆக்க வேண்டிய பொறுப்பு உன்னிடத்தில் இருக்கிறது. என்னால் உனக்கான மன்வெளியையும், ஆறுதலையும், உற்சாகத்தையும், உந்துதலையும், அரவணைப்பையும், அன்பையும் தான் தரமுடியும். வழக்கினுள் உள்ளே வர முடியாது. அதை நீ தான் எதிர்கொள்ள வேண்டும். இது ஒரு பரிட்சையாக எடுத்துக் கொள் ஹனி. தன்னந்தனியாய், உன் தன்னம்பிக்கையும், நேர்மையும் மட்டுமே கொண்ட ஒரு வாழ்விற்கான உன் தயார் படுத்துதலை உனக்கு இந்த காலகட்டம் பெற்றுதரும்.
குட்டி, வாழ்க்கை என்பது ஒரே நேர்கோடாக எப்போதும் பயணிப்பதில்லை. பலவிதமான சாகசங்களும், திருப்பங்களுமாய் நிறைந்தது தான் வாழ்க்கை. நம்மால் நம்மை விட்டு வாழ முடியாது என்கிற நிலைக்கு வந்துவிட்டோம். தூரல்களின் ஸ்பரிசத்தில் மெல்லிய குளிர்காற்றின் வாசத்தில் நாம் நம் வாழ்வின் சந்தோஷங்களுக்காக இன்றைக்கு அலைந்து கொண்டிருக்கிறோம். நாம் கொண்ட கொள்கையிலும், அணுகுமுறையிலும் நாம் தெளிவாக இருப்பதில்தான் இலட்சியங்களின் வெற்றியிருக்கிறது. மனதிற்கு இதமாக இருக்கிறது, நீ எடுத்திருக்கும் முடிவினில் நீ தெளிவாக இருப்பதில். இந்த தெளிவில் தொடங்குகிறது நம் வாழ்க்கை. ஸ்மிருதியில்லாத ஒரு வாழ்வினை நம் இருவராலும் நினைத்து பார்க்க முடியாது. என்றைக்கோ தொடங்க போகும் நம் வாழ்விற்கான ஒரு வீட்டினை விட, என் பெண்ணிற்க்காக இன்றையிலிருந்து விர்ட்யுவல் வெளியில் அவளுக்கான வீட்டினை கட்டும் உந்துதலில் என் அன்பு தெரியுமென்று நினைக்கிறேன். உன் கடந்த கால கசப்புணர்வின் அனுபவத்தில் நீ சொல்லும் "என் அன்பும், காதலும் நிரந்தரமானதில்லை" என்பதினை புரிந்துக் கொள்கிறேன். எப்போதும் போல இன்னும் ஒரு முறை உன் நினைப்பினை தவறென புரிய வைக்கிறேன் என்கிற நம்பிக்கையுடன்.
காதலோ, காமமோ, உறவோ, பகையோ ஏற்படுவதன் அடிப்படை காரணம் புரிந்துணர்வுதான். அத்தகைய ஒரு நீண்ட, தெளிய புரிந்துணர்வு நம்மிடையே ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் நிஜம். நீ நம்ப மறுத்தாலும், விட்டுக் கொடுத்து போய்விடுதலில் விலகிவிடுகிறது நம்பிக்கையின்மையும், அவநம்பிக்கைகளும். எனக்கான பெண் நீயாக தான் இருக்க வேண்டுமென்பதில் நான் தெளிந்திருக்கிறேன். கிஷோர் சொன்ன பிறகு என்னை அழுத்தமாய் அணைத்துக் கொண்டு முத்தமிட்ட போது உன்னுள்ளேயும் அந்த எண்ணம் நன்றாக ஊறியிருக்கிறது என்று தெரிகிறது. உன் காயங்கள் எச்சரிக்கையாய் இருக்க சொல்லுகின்றன அவ்வளவுதான். வருத்தங்கள் ஏதுமில்லை குட்டி, எனக்கும் புரிகிறது. மரங்களின் நிழல்களிலும், உதிர்கின்ற இலைகளிலும் இருக்கும் செய்திகளையும், தூரல்களின் இடைவெளிகளைக் கண்டு வியப்பதிலும் மனம் செலுத்துகின்ற எனக்கு உன் மனமும் அதன் அழுகுரல்களின் இடையே தெரிக்கும் பய உணர்வுள்ள காதலும் புரிகிறது குட்டி. என்னை உன்னிடத்தில் நிருபிப்பதை தவிர வேறு எந்த வகையிலும் என்னால் அந்த பயத்தினைப் போக்க முடியாது.
மனசு முழுக்க நிறைந்தபின் reconfirmation தேவையில்லை என்று தெரிந்தாலும், கொஞ்சமும் அழுத்தங்களின்றி, காதலும், காமமும், கவிதையுமாய் இன்னொரு முறை உரக்க சொல்லுகிறேன் ரம்யா....
I luv you and i am with you.

<< Home