மனசிலிருந்து மெட்ராஸ் வரை

Wednesday, June 28, 2006

ஒரு சொல். ஒரு இடம்

இன்று மாயவரம் சென்று வந்தேன். உன் அருகாமை இல்லாமல் இருப்பது என்பது நரகத்துக்கு சமம் என்று தெரிந்தாலும், இந்த பயணம் அதை அழகாக உறுதி செய்தது. காரின் உள்ளே, பாட்டரி தீர்ந்துப் போகுமளவிற்கு என் லாப்டாபில் உன்னோடு பேசியது போதாமல் இருக்கிறது. பேசியது எதுவும் நினைவில் இல்லை, ஆனால் sweet nothings என்று சொல்லுவது போல அழகாய் இருக்கிறது. கரும்பு சாப்பிட்டிருக்கிறாயா ? கடித்து சாப்பிடும்போது ஒரு சில துணுக்குகள் பல்லிடுக்கில் மாட்டிக் கொள்ளும். நாக்கு சும்மா இருக்காது. நிரடிக் கொண்டே இருக்கும். அது அந்த இடுக்கிலிருந்து வெளியே வரும் வரை வேலை செய்தாலும், செய்யவில்லை என்றாலும் நாக்கு சும்மா இருக்காது. நெருடி வெளியே எடுக்கும் வரை நமக்கு ஒரு மாதிரி இருக்கும். அப்படியே எடுத்தாலும் திடீரென வெறுமையாய் ஆகிவிடும். ஏதோ ஒன்று குறைந்தது போல தோன்றும்.

ரம்யா, உன் நினைவுகளும் அப்படிதான் என்று தோன்றுகிறது. நீ இருந்தாலும், இல்லாமல் போனாலும் அது இல்லாமல் இருக்க முடியவில்லை. எப்படி வகைப்படுத்துவது என்று தெரியாமல் போகிறது. உன் நினைவுகள், எஸ்.எம்.எஸ்கள், ஈமையில்கள், அரட்டை இல்லாமல் வாழ்வது எப்படி என்று தெரியவில்லை. அவை இருந்தாலும் பத்தவில்லை. இல்லாமல் போனால் கேள்வியே வேண்டாம், பரபரவென்று இருக்கிறது நீ இல்லாமல் வாழ்க்கை. காரிலிருந்து வெளியே ஒரு ஆறு மணி போல பார்த்தால் சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது. மேகங்கள் கலைந்து கலைந்து புதிய உருவங்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. மேகங்கள் கலைய கலைய உன் சிரிப்பும் மேகங்களோடு கலைவது போல தோன்றியது. உன் முகத்தினை மேகங்களுக்கிடையே தேடினேன், அச்சு அசலாக என்னால் பொறுத்த முடிகிறது. மனபிம்பமா, இல்லை மேகங்களின் சேர்க்கையா என்று தெரியவில்லை ஆனால் எனக்கு தெரிகிறாய் குட்டி. என்ன சொல்வது என்று புரியவில்லை, ஆனால் ஒரு மாதிரியாக சந்தோஷமாக இருக்கிறது.

இன்று வந்த உன் ஒரு இமெயிலின் ஒரு வார்த்தை சிலிர்ப்பினை உண்டாக்கியது - Ramya Narayanan என்று கையெழுத்திட்டிருந்தாய். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதை டைப் பண்ணிய விரல்களுக்கு :) அதை விட சந்தோஷம் தரக் கூடிய ஒரு வார்த்தையினை சமீபத்தில் நான் பார்க்கவில்லை. இந்த ஒரு வார்த்தை நிஜமாக வேண்டும் டார்லிங். இந்த ஒரு வார்த்தை மட்டும் சட்டப்பூர்வமாக நம்மால் செய்ய முடிந்தால் போதும், வேறெதும் தேவையில்லை, அந்த ஒரு சொல்லுக்காக வாழலாம் என்று தோன்றுகிறது. ஒரு சொல்லினை நீ சொல்லிவிட்டாய் ரம்யா. அதனை உண்மையாக்க நாம் உழைத்தாக வேண்டும். கண்டிப்பாக உழைக்கிறேன் குட்டி, உன்னை விட ஒரு அருமையான மனைவி அமைவாளா என்பது சந்தேகம், உலகில் நமக்கான நம்மிடத்தினை நாம் நிலைநிறுத்திக்கொள்ள கொஞ்சம் கஷ்டப்படலாம். எல்லா எல்லைகளையும் மீறலாம் என்று தோன்றுகிறது.

I AM DYING என்கிற ஆங்கில வார்த்தையினை உனக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று மொழிபெயர்க்கலாமா ? இறத்தல் என்பது நமக்குள் ஒத்துவராது. அலைகள் கரையில் அடித்துக் கொண்டேயிருக்கின்றன. மாயவரம் அக்ரஹாரம் வீதியில் எஸெல்லின் சொந்த வீடு இருந்தது. அதனை பார்த்தோம், ஆனால் பக்கத்தில் ஒரு குளம் இருக்கிறது. தூரே ஒரு அனுமார் கோவில் இருக்கிறது. அகலமான வீதி. புற்கள் நிரம்பிய குளக்கரை. வீட்டின் பின்னே பரவியிருக்கும் greenery. குட்டி, ஒரு நிமிடம் சபலம் வந்தது, பேசாமல் வாங்கி விடலாமா என்று. உனக்கான, எனக்கான, நமக்கான, நம் குழந்தைகள் ப்ரீயாய் விளையாட ஒரு இடம். குளத்தின் கரையிலிருக்கும் வேப்பமரத்தின் காற்று தாலாட்டு இடம். வீதி அகல கோலம் போட்டு, உன் கண்களை பார்த்து, i love you ramya kuti என்று சொல்ல ஒரு இடம். அகலமான தாழ்வான மொட்டை மாடியில் நிலா பார்த்து உன் கையால் சாதம் ஊட்ட ஒரு இடம். புகைப்போக்கிகளில் வழியும் புகை தெரிக்கும் சமையலைறைகளில் பின்னால் வந்து உன்னை கட்டிப் பிடித்து, கழுத்தில் முத்தமிட்டு பில்டர் காபி போடும் போது தொல்லை கொடுக்க ஒரு இடம். ரம்யா, காத்திருக்கிறேன் வந்து விடு குட்டி, ஒரு தனியான உலகில் நாம் வாழ்ந்துக் கொள்ளலாம். காத்துக் கொண்டிருக்கிறேன் குட்டி, உனக்காகவோ, எனக்காகவோ இல்லை, நமக்கான ஒரு சிறிய உலகில் நமக்கான நம்பிக்கையோடு.