பட்டாம்பூச்சி பறக்கும் நேரம்
வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்து பார்த்திருக்கிறாயா ? ஒரு சொல், ஒரு வாக்கியம் உன் வாழ்வினை மாற்றும் வல்லமை கொண்டது என்று தெரிந்து அந்த வார்த்தையினை கேட்பதற்காக காலை 4 மணிக்கு எழுந்து ஒடியிருக்கிறாயா ? பைக்கினை உதைக்கும் அந்த ஒரு நொடியில், உன் வாழ்வின் அடையாளங்களை உயிர்ப்பிக்கும்/தொலைக்கும் காரணங்களை யோசித்திருக்கிறாயா ? ஒரு அரை மணி நேரத்தில் வயிற்றினுள் மரம் முளைத்து பார்த்திருக்கிறாயா ?
ரம்யா, இது அனைத்தும் இன்று காலை நடந்தது. நான் நானாக இல்லை என்பது வெறும் வார்த்தையாக முடியும். சந்துருவினை பார்க்கும் முன்னர், மூன்று முறை டாய்லெட் சென்று வந்துவிட்டேன். பதட்டம் அவர் என்ன சொல்லப் போகிறார் என்றில்லை. ஆனால், எதையாவது சொதப்பலாக சொல்லி விட்டால் உன் மனதினையும், உன்னையும் சமாதான படுத்துவது எப்படி என்பது தான் பயம். நேற்று கூட நீ உச்சக்கட்ட குழப்பத்தில் இருந்தாய், இதில் அவர் எதாவது சொல்லி தொலைத்தால் அவ்வளவுதான். மொத்தமாய் தலையில் துண்டுதான் ;)
முதலில் எடுத்தவுடன் நீ காளஹஸ்தி போனாயா, உனக்கு நாக தோஷமிருக்கிறது என்று தான் தொடங்கினார். அப்போதே எனக்கு உள்ளே ஏதோ உடைந்தது. பின் மெதுவாய் வியாபாரம், பார்ட்னர்கள் என்று சொல்ல ஆரம்பித்தவுடன், உள்ளே கொஞ்சமாய் ஏதோ துளிர் விட ஆரம்பித்தது. முதலில் நான்தான் ஒரு பெண்ணை நேசிக்கிறேன், அவள் வேறு ஜாதி என்று ஆரம்பித்தவுடன், உடனே அவர் சொல்லத் தொடங்கிய ஒவ்வொரு வார்த்தையும் துளிர் விட்ட அரும்பிற்கு போஷாக்காய் மாறிவிட்டன. எல்லாம் சொல்லி முடித்து என்ன பெயர் என்று கேட்டு "ரம்யா" என்று சொன்னவுடன் பேர் ராசியும் பார்த்து "நீங்க ரெண்டு பேரும் அமோகமாக இருப்பீங்க. அக்டோபர்க்கு அப்புறம் உன் வீட்டுல பேச ஆரம்பி. கொஞ்சம் முறைப்பார்கள், ஆனால் ஏப்ரலுக்குள் கல்யாணம் நடக்கும்" என்று சொன்ன தருணத்தில் ஒரு அருமையான் செர்ரி மரம் என் மனதில் முளைத்து நின்றுவிட்டது. இதையெல்லாம் நான் நம்புகிறேனா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், சத்தியமாய் அவர் சொன்னவுடன் வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறந்தது நிஜம். ஐ லவ் யூ சோ மச் ரம்யா, என்ன பேசறதுன்னு தெரியல ஒரு நிமிஷம். உடனே எஸ்.எம்.எஸ், போன் எதுவும் பண்ண முடியாது. அவ்வளவு சந்தோஷத்தை மனசுல வைச்சுட்டு உன்னோட பேசாம இருக்கற கொடுமை இருக்கே அது தான் நரகம் ஹனி.
சந்தோஷத்தை பகிர்ந்துகிறதை விட பெரிய சந்தோஷம் உலகத்துல கிடையாது. ஆனா, சந்தோஷம்ன்னு தெரிஞ்சும் சொல்லாம இருக்கறதை விட கொடுமை வேற எதுவும் கிடையாது. இது எல்லாம் நடக்குமா என்கிற கேள்வியினை விட இது ஒரு சின்ன மாரல் பூஸ்ட் என்ற அளவில் எடுத்துக் கொண்டு, நாம் நம் போராட்டத்தினை தொடங்க வேண்டியதுதான். இதனால், பிரச்சனைகள் வாராது என்றோ, பூகம்பங்கள் வெடிக்காது என்றோ சொல்லவில்லை. நாம் நமக்காக, நம் குழந்தைக்காக, பல்லாயிர கணக்காண குடும்பங்களுக்காக தான் ஒன்றாக வாழ சம்மதித்து இருக்கிறோம். ஒவ்வொரு முறையும் நீ பேசும் போது, நீ எனக்காக மட்டும் பேசவில்லை என்பதையும், ஸ்ருதியையும் சேர்த்து நமக்கு பல குழந்தைகளைப் பார்த்து, பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையும் மனதில் நிறுத்திக் கொள். நாம் ஒன்றாய் இருக்க வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது ரம்யா. இவள் தான் என்னுடைய மனைவி என்று நான் officialla சொல்ல கூடிய காலம் வெகுதொலைவில் இல்லை. I love you ramya kuti. உனக்கான காத்திருப்பில் காலம் போனாலும் பரவாயில்லை, காத்திருகிறேன் ரம்யா, நீயும் என் குட்டி ஏஞ்சலும் வருவீர்கள் என்கிற நம்பிக்கையுடன்.

<< Home