மழையோடு கொஞ்ச[சு]ம் நேரம்
இங்கே வெளியே மழை பெய்கிறது. மஸ்கட்டிலிருந்து உன்னால் மழையினை ரசிக்க முடியாது என்று தெரியும். மழை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஜலதாரை கம்பிகளாக நூல் பிடித்தாற்போல இறங்கும் மழைத்துளிகள் தலையில் இடித்து இறக்கும் அந்த ஒரு நொடியில் வாழ்வின் உச்சக்கட்ட சந்தோஷங்கள் நினைவுக்கு வரும். உடலுக்குள் போய் லேசாய் நடுக்கமுறும் தருணங்கள் இனிப்பானவை. மழையினைப் பார்ப்பதும், மழையினுள் நனைவதுமாக நிறைய நாட்களை கழித்திருக்கிறேன். உன்னோடு இணைந்த பிறகு, மழை வரமாலா போய்விடும். நீ, நான், ஸ்மிருதி என குடும்பமாய் நனையலாம். ஆனந்தமாய் நனையலாம். மழையினைக் கண்டு உள்ளேயோடும் மக்களைப் பார்த்தால் பரிதாபமாய் இருக்கிறது. மழையினுள் நனைவதை விட சட்டை அழுக்காகுமே என்கிற கவலையினை எப்படி இனங்கண்டு கொள்வது. நான் நனைகிறேன் ஹனி. வா, இனிமையாய் நனைவோம். நனைந்து ஒவ்வொரு அங்கமும் ஈரம் சொட்ட சொட்ட படுக்கைக்கு போவோம். இணைவோம். செக்ஸ் என்பது வெறுமனே படுக்கை மட்டுமல்ல, நன்றாக மழையில் நனைந்த உன் தேகம் கூட தான் அருமையான இணைவுக்கு அச்சாரமாக இருக்குமென்று தெரிகிறது. மழைத்துளி தெரிக்கும் உன் மார்ப்பில் முத்தமிட உதடுகள் ஈரமாக காத்திருக்கின்றன. உன் மூக்கின் நுனியிலிருந்து சொட்டும் ஒரு சொட்டு நீருக்காக நான் வானம் பார்த்துக் காத்திருக்கிறேன்.
என்னை பிரிந்து மிகவும் வருந்துகிறாய் என்று தெரிகிறது. அதே நிலை தான் இங்கும். என்ன சொல்ல? அடுத்த 40 நாட்கள் நரகமாய் தான் நகரும் என்று தெரிகிறது. ஒன்றும் செய்ய முடியாது. மழையினை எதிர்பார்த்து காத்திருக்கும் பாலைவனங்களைப் போல, உன் வரவினை எதிர்பார்த்து காத்திருப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது என்னால். என்னன இந்த அளவிற்கு நேசிக்கவும் ஒரு ஜீவன் இருக்கிறது என்ற எண்ணமே பல புதிய பரிமாணத்தினைக் கொடுக்கிறது. என்னை ஒட வைக்கிறது, உலகின் அற்புதமான விஷயங்களை உன் காலடியில் கொண்டு கொட்ட வேண்டும் என்கிற ஆசை வந்திருக்கிறது. உன்னை ஒரு தேவதையாய் வைத்துக் கொள்ள வேண்டுமென்று மனது அடித்துக் கொள்கிறது. ஒரு வாரத்தில் உலகம் மாறுமா என்று முன்பு கேட்டிருந்தால் சிரித்திருப்பேன். எனக்கு மாறியிருக்கிறது. கோவம் குறைந்திருக்கிறது. எல்லாரையும் புன்முறுவலோடு எதிர்கொள்கிறேன். நம் அலுவலகத்தின் தென்னைமரத்தில் அமர்ந்திருக்கும் காக்கைகளின் உதிர்ந்த சிறகுகளின் மென்மையைப் போல, என் சுபாவம் மாறியிருக்கிறது. என்னை இளகுவாய் மாற்றியிருக்கிறாய் நீ. ரம்யா, உனக்காக ஒரு உலகினையோ, நாட்டினையோ என்னால் உருவாக்க முடியாது. நம் மன அடுக்குகளினுள்ளே ஆழமாய் போனால் நமக்கான உலகில் நாமிருவர் மட்டுமிருக்கிறோம். நமக்கான உலகம் அங்கிருக்கிறது. அந்த உலகிற்கு நீ தான் மகாராணி. உன் தோள் சாயும் ஒரு ஜீவனிருக்கிறது. வேறு எந்த பதவியும், செய்கையும் வேண்டாம். உன்னை என் மார்பில் சாய்த்து, உன் முடி விலக்கி, நெற்றியில் மென்மையாய் முத்தமிடும் தருணங்களுக்காகவும், என் கைகள் சுதந்திரமாய் உன் வயிற்றினைச் சுற்றி மெதுவாய் வருடி உன்னை வாரி மொத்தமாய் அணைத்துக் கொள்ளும் ஒரு நேரத்திற்காகவும் காத்திருக்கிறேன்.
29ஆம் தேதி விமானத்திற்கான என் காத்திருப்பு ஆரம்பிகிறது ரம்யா. என்னிரு கைகளாலும் உன்னை நெஞ்சோடு அணைக்கும் அந்த சொர்க்க தினத்திற்காக யோசிக்க ஆரம்பிக்கிறேன்.

<< Home