மனசிலிருந்து மெட்ராஸ் வரை

Saturday, June 10, 2006

துபாய்க்கு பை பை.... என் ரம்யாவின் வீட்டிலிருந்து

இங்கே நாட்கள் மிக மெதுவாக நகர்கின்றன. உன்னுடைய எஸ்.எம்.எஸ்ஸூகளிலும், அவ்வப்போது காதுகளில், தேன் வழியும் உன் குரலிலும் தான் நாட்கள் நகர்கின்றன. இப்போது மணி இரவு 10.30 உன்னுடைய குட் நைட் எஸ்.எம்.எஸ்ஸிற்கான காத்திருப்பு ஆரம்பிக்கிறது. என்ன செய்திருக்கிறாய் என்னை ரம்யா நீ? திருப்பாவையில் ஒரு வார்த்தை வரும், "என்னை ஆட்கொண்ட பெருமானே" என்று. என்னை நீ ஆட்சி செய்கிறாயா என்கிற சந்தேகம் வருகிறது. உன் அருகாமை இன்னமும் சில தினங்களில் அமையப் போகிறது என்கிற நினைப்புதான் என் வேலைகளை உற்சாகமாக செய்ய வைத்திருக்கிறது. மனதில் மழைத்துளியினை முதல் முறையாய் கையிலேந்தும் ஒரு குழந்தையின் சந்தோஷமும், ஆர்வமும், பரபரப்பும் தான் இப்போடு என்னிடத்தில் இருக்கிறது. உன்னோடு பேசும் ஒவ்வொரு கணமும், ஒரு இனம்புரியாத சந்தோஷம் என்னுள்ளே ஒடிக் கொண்டிருக்கிறது. என்னவென்று தெரியாமல், ஆனால் ஆனந்தமாக இருக்கிறது. உன்னால் இப்படி இருக்க முடியாது என்று தெரிந்தாலும், உன் sms களில் தெரியும் ஏக்கமும், பரிதவிப்பும், காதலும்,பரிவும், காத்திருப்பும் என்னையும் பற்றிக் கொள்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு அழும் குழந்தையின் மனநிலையில் சத்தம் போடுகிறேன்.

இழுத்து மூடிய போர்வையின் கதகதப்பில், ரம்யா குட்டி உன்னை தொடவா என்று கேட்கத் தோன்றுகிறது. மொபைலில் உன் பெயர் பார்த்தால், அக்கம்பக்கம் பார்த்து உடனடியாக முத்தமிடுகிறது என் உதடுகள். அறையினுள் தனியாய் இருந்தால், கண்ணாடி பார்த்து, ஐ லவ் யு ரம்யாவினை 10 மாதிரியாக சொல்லி பார்க்கத் தோன்றுகிறது. தலையணைகளின் அணைப்பில் முத்தமிட தோன்றுகிறது. உன் கைக் கோர்க்கும் ஒரு நாளின் எதிர்பார்ப்பில் மெல்லியதாய் விரல்களில் உன் உதடுகளை தடவிப் பார்க்கிறேன் உன் புகைப்படத்தில். உன் இமைகளுக்கு உறுத்தாமல், தாபத்தில் மூடும் உன் கண்களை முத்தமிட்டு, அதன் கதகதப்பில் நீ ஆனந்தப்படும், அமைதியாகும் தினத்திற்காக என் கைகள் கேலண்டரில் தேதிகள் கிழிக்கின்றன. கண்கள் எவ்விதமான சங்கோஜமும் இல்லாமல், உன் மார்புகளைப் பார்க்கின்றன, என்னுடைய முயல் குட்டிகள் அமைதியாய் தூங்கிக் கொண்டிருக்கின்றன. என்னுடையவள் என்பது உறுதியாகும் ஒரு நாளுக்காக மனம் ஏங்க தொடங்கவிட்டது. உன் கண்களைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கிறேன்... உன்னை அப்படியே கட்டிப் புடிச்சி, மெதுவாக முடியெல்லாம் விலக்கி உன்னோட கழுத்துல கிஸ் அடிச்சி, கடிச்சி.... பேச ஆரம்பித்தால் நிறுத்த முடிவதில்லை. எழுதும் போதே உதடுகள் ஈரமாகின்றன, மூன்று நாட்களாய் துபாய் வெயிலில் என் உதடுகள் வெடித்து வலிக்கிறது. உன் இதழ்கள் பிடித்தாலும், வலிக்குமா, இனிக்குமா என்று தெரியவில்லை. ஆனால், மஸ்கட்டில் தரையிரங்கும்போது வலியோடு இறங்க மாட்டேன். உன்னோடு எவ்விதமான inhibitions இல்லாமல், நிர்வாணமாய் இருக்கும் ஒரு நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். இது வெறும் செக்ஸ் அல்ல, இது ஒரு விதமான யோகம். தவம். மெடிட்டேஷன் என்று சொல்லிக் கொள்ளலாம். என் மார்பில் உன் தலையிருக்க, உன் தலை முடி வருடி நெற்றியில் முத்தங்களிட்டு, எவ்விதமான சங்கடங்களுமின்றி உன் ஜெர்ரியோடு நீ விளையாடும் ஒரு நாளுக்காகவும், நம் உலகத்தினைப் பற்றி நாம் பேசும் ஒரு நாளுக்காகவும் மனம் காத்துக் கொண்டிருக்கிறது. உடல் என்கிற நிலை மாறி, நீ எனது, நான் உனது என்று மாறும் ஒரு கணத்திற்காக தான் என்னுடைய காலம் ஒடிக் கொண்டிருக்கிறது. உன் மடியில் படுத்து, ஸ்மிருதி, நம் குழந்தை, நம் வீடு, மக்கள், என்ன செய்யப் போகிறோம் என்று பல விஷயங்கள் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. fk u bastard என்று சாட்டில் நீ கத்தும் தருணங்களில் ஆஹா, என்னுடைய பொண்டாட்டி என் மீது உரிமை எடுத்த கத்துகிறாளே என்று எரிச்சலையும் மீறி சந்தோஷம் பெருக்கெடுத்து ஒடுகிறது. எல்லா இடங்களுக்கும் ஒடிக் கொண்டிருக்கிறேன், உள்ளுக்குள், உனக்காக மனது ஒடிக் கொண்டிருக்கிறது. என்னுடைய ரம்யா என்கிற எண்ணம் தான் இயக்கிக் கொண்டிருக்கிறது. எதுவும் செய்யாமல், செக்ஸோ, வேறு எந்த நினைப்புமோ இல்லாமல், உன் அணைப்பின் கதகதப்பில் வாழும் சில மணித்துளிகளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

எதை நேசிக்கிறேன் என்று தெரியாமல் எல்லாவற்றையும் நேசித்துக் கொண்டிருக்கிறேன். சில்லென்ற ஏசி காற்று அறையெங்கும், உன்னுடைய போட்டோ பார்க்காமல் ஆரம்பிப்பதில்லை என்னுடைய ஒரு தினம். முத்தமிட்டு, முத்தமிட்டு என்னுடைய லாப் டாப் ஈரமானது மிச்சம். நேரில் கொடுக்க, கொஞ்சம் முத்தங்களை உனக்காகவும் விட்டு வைக்கிறேன், . நீ அனுப்பிய நூறாவது sms-இல் உன்னுடைய ஜெர்ரிக்கு கொடுத்த பிரெஞ்சு கிஸ் இன்னமும், ஜெர்ரியினை உறங்க விடாமல் தொல்லை படுத்துகிறது. வார்த்தைகளுக்கு இவ்வளவு சக்தியிருக்கிறதா என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. உடல் தாண்டி, வெறுமனே வார்த்தைகள் இவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்றால், அது வார்த்தைகளால் மட்டுமல்ல, அது நீ என்னுள் பரவியிருக்கும் விதத்தில் இருக்கிறது. உன் நினைவு இல்லாமல் இருக்க முடியுமா என்று இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன். எந்த வேலைகள் செய்தாலும், உள் மனதிலிருந்து எட்டிப் பார்க்கிறாய், கொஞ்சமாய் தட்டிப் பார்க்கிறாய். விரல் தேய sms களில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் நாம். ரம்யா என்கிற ஒரு பெயர் என்னுள் ஏற்படுத்தும் அதிர்வலைகளை எழுத முடியாது. இப்படி உன்னோடு பேச முடியும் என்று கூட தோன்றவில்லை. உன் கண்கள் பார்த்து என் கண்கள் கசிந்து சந்தோஷத்தில் அழுது விடுவேனோ என்கிற பயமிருக்கிறது. என் மனைவியின் கண்கள் பார்க்காமல் பேச முடியாது என்னால். ரம்யா என்று சொல்லும்போதெல்லாம், என் உதடுகள் தித்திப்பதாக என்னுள் ஒரு நினைப்பு. தேவதைகள் இனிப்பானவர்கள். என்னுடைய தேவதை உன்னை தவிர யாராய் இருக்க முடியும்.

என்னால், என்னுள் எழும் எல்லாவற்றையும் உனக்காக கொடுக்க தயாராக இருக்கிறேன். என்ன வேண்டுமானாலும் கேள் என்கிற வசனமில்லை. வசனங்கள் பேசக் கூடிய டீன் ஏஜ் காதலர்கள் இல்லை நாம். புரிந்து கொள்ளுதல் என்பது உலகில் மிக அரிதாக கிடைக்கும் ஒரு விஷயம். வெறுமனே சாப்பிடும் சிப்ஸிலிருந்து எல்லா விஷயங்களிலும் ஒத்துப் போகிறோம். இதை தவற விடக்கூடாது என்கிற வேகமும், பயமும் இப்போது இருவரின் கண்களிலும், உணர்வுகளிலும் தெரிய ஆரம்பித்திருக்கிறடு.மாற்றத்தின் முதல் படியாக இது இருக்கலாம். உடல் கூட இரண்டாம் பட்சம் தான் நம்மிடையே. ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்ப்பதுதான் உச்சம் என்று நினைத்தால், நானும் நீயும் இப்படி இருக்க மாட்டோம். குளிர் உள்ளே போய் லேசாக நடுங்குகிறது உடல். உன் அணைப்பு கதகதப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது இப்போது. நடு இரவு 12 மணிக்கு என்னால் மனம்விட்டு பேசக் கூடிய ஒரு துணை வேண்டும், ரம்யா, உன்னை தவிர எனக்கு யாரும் கண்ணில் தெரியவில்லை. உனக்கும் அப்படியொருவனாக நான் இருப்பேன் என்று நம்புகிறேன். இரவுகள் மென்மையானவை. நான் வரும் ஒரு நாளுக்காக நீயும் நானும், 4 வாரங்கள் காத்துக் கொண்டிருந்தோம். இனிமேல் இப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று தெரியவில்லை, ஆகையால் கிடைத்த சந்தர்ப்பத்தினை முழுமையாக உபயோகப்படுத்திக் கொள்வோம். மனம் விட்டு பேசுவோம். உடல் பயமின்றி உலாவுவோம். முத்தங்களும், மெல்லிய சத்தங்களுமாய் இருப்போம். மனதுக்கு பிடித்தவளோடு கிடைக்கும் ஒரு அணைப்பு, ஒரு முத்தம், ஒரு தொடுகை போதும், என்னை போன்ற ரசனையான மனிதர்களை உயிர்ப்பித்திருக்கும் ஒரு ஜென்மத்திற்கு.