மனசிலிருந்து மெட்ராஸ் வரை

Sunday, May 28, 2006

இவ்வளவு அழகா உன் குரல்

இவ்வளவு சண்டை எதுக்கு இன்னைக்கு? நேத்து ராத்திரி ஒரு மணிக்கு உன்னோட பேசினது is height of romance and luv. இவ்வளவு அழகா உன் குரல், யாருமில்லாமல், நீயும் நானும் பேசும்போது தான் தெரியுது. நீ அழகுன்னு தெரியும். குரல் கூடவா? gawd! where am i heading to? நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இப்பவும் காதுல இருக்கு..... குட்டிமான்னு நீ கூப்பிடறது தான் peak. அந்த ஒரு வார்த்தைக்காக எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சண்டை போடறேன். உனக்கு தெரியாது ரம்யா, அந்த வார்த்தை அப்படியே make me melt. just cant explain how much i am waiting for that from your voice. தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அப்படின்னு ஒரு கூட்டம் இருக்கு. அந்த வார்த்தையும், அந்த மெல்லோனஸும் அப்படியே ஆசிர்வதிக்கிறா மாதிரி இருக்கு.

15,000 அடிக்கு மேல பறக்கும் போது உன் ஞாபகம் தான் வருது. எதிர் சீட்டுல உட்கார்ந்து இருந்த ஒரு தெலுங்கு பொண்ணு சைடுல ஒரு மாதிரி உன்னோட ஜாடை. ரொம்ப பார்த்தா தப்பாயிடுமேன்னு பார்க்கலை. ஆனாலும் உன் நினைப்பு இல்லாம வாழறது ரொம்ப கஷ்டம். சீக்கிரம் வா, இங்கெ ஒருத்தன் ஏங்கறது புரியலையாடீ, என் செல்ல பொண்டாட்டி. i just luv u like the sky covers the world.

உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது, ஒருத்தன் இங்கே காத்துட்டு இருக்கான் உனக்காக, ஒவ்வொரு நாளும் நீ ஏதாவது விஜய் பத்தி சொன்னா, உடனே நான் அந்த தப்பை என்னிக்காவது பண்ணிருக்கனான்னு தான் பாக்கறேன். sort of introspection, நல்ல வேளை நீ சொல்ற எந்த டிபரன்ஸும் என்கிட்ட இல்லை, அதே சமயத்துல என்னை நல்லவனும் சொல்லிக்க விரும்பலை, நானும் மனுஷன் தான். எனக்கும் தனிப்பட்ட அஜென்டா இருக்கு. ஆனா, அடுத்தவங்க மேல என் விருப்பத்தை திணிக்கிற அளவுக்கு கிடையாது. சில சமயம் யோசிப்பேன், உன்கிட்ட நம்ம கல்யாணம் பேசறது கூட ஒரு மாதிரி pushing things too hard on your side அப்படின்னு. ஆனா அதே சமயம், நாம் ஒண்ணா இருந்தா ஒருத்தருக்கு ஒருத்தர் நிறைய விஷயங்கள் பண்ண முடியும்னு தோணுது, அதுக்காகவாவது நாம ஒண்ணா வாழ டிரை பண்ணலாமே.

என்னை சுத்தி இருக்கறவங்க எல்லாரும் badly wanted me to get married. நான் யாரையும் புவனா தவிர நினைச்சு பாக்கலை. இப்ப கிட்டத்திட்ட 15 வருசம் கழிச்சு நீ தான் அந்த இடத்துல இருக்க. உன்னை தாண்டி இன்னொரு பொண்ணு அப்படின்னா, என் probability படி 45 வயசுல நடக்கும். அப்ப நடக்கறதும், நடக்காததும் ஒண்ணுதான் ;) i missed once, i dont want to miss one more time வந்துறா குட்டி.

என் மேல கோவம் இருக்கு, உன் மேல கோவம் இருக்கு, நம்ம மேல கோவம் இருக்கு, ஒரு ஐஸ்கீரிம் பார்லர்ல ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தா, வாழ்க்கை மாறியிருக்குமோ, தெரியல ரம்யா? இன்னிக்கு நம்ம பேசற எல்லா விஷயத்தையும் அன்னிக்கு பேசியிருப்போமா, தெரியல, ஆனா சொல்லிருப்பியா நீ இந்த மாதிரி. சரி விடு. உளர்றேன் :)

இங்க டின்னர் சாப்பிடும்போது அனு கிட்ட சும்மா கேட்டேன், ஒன்றரை வயசுல ஸ்மிருதின்னு ஒரு பாப்பா இருக்கு, நாம எடுத்துக்கலாமான்னு. அனு அதுக்குள்ள என் தங்கையோட பேசி, அந்த பாப்பாவை நான்தான் பார்த்துப்பேன்னு சொல்றா. காலம் வேகமா போகுது. நாம தான் ஸ்லோவா இருக்கமான்னு சில சமயம் தோணுது. நம்மள விட நம்ம குழந்தைங்க ஸ்மார்ட்டானவங்க ரம்யா. why cant we shed our inhibitions, baggages and live for their welfare.